விருதுநகர் மாவட்டத்தில் உள்ள புதுக்கோட்டை கிராமத்தில் வசித்து வருபவர் தான் பூமிநாதன். இவருக்கு தமிழரசன் என்ற மகன் இருந்தார். இதில் தமிழரசன் வீட்டிலிருந்து வெளியே சென்ற நிலையில் மீண்டும் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் தமிழரசன் அங்குள்ள ஒரு தோட்டத்தில் அரிவாள் வெட்டுப்பட்டு சடலமாக கிடந்தார். இது தொடர்பாக தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தமிழரசனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலைக்கான காரணம் குறித்து காவல்துறையினர் கூறியிருப்பதாவது, தமிழரசன் தன் தாத்தா சங்கரலிங்கம் என்பவருடன் வசித்து வந்தார். இதற்கிடையில் தமிழரசன் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். அந்த பெண்ணின் குடும்பத்துக்கும் தமிழரசனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது. இதனால் தமிழரசன் சேலத்துக்கு சென்று அங்கு வேலை செய்து வந்தார்.
இந்நிலையில் சொந்த ஊரில் நடந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அவர் வந்தபோது முன் விரோதத்தை மனதில் வைத்து கொலை செய்துள்ளனர் என்று தெரிவித்தார். மேலும் இந்த கொலை வழக்கு தொடர்பாக சங்கரபாண்டி என்ற அருண், ரஞ்சித்குமார், ஜெயசங்கர், முத்துப்பாண்டி, செல்வம், சுரேஷ் ஆகிய 6 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். அதுமட்டுமின்றி மற்றொரு குற்றவாளியான மணிகண்டன் என்பவரையும் காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
