திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சிக்கு உட்பட்ட அம்பலால் நகரில் அஞ்சலை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான ஒரு செம்மறி ஆடு கடந்த செப்டம்பர் 14ஆம் தேதி காணாமல் போனது. இதனால் அப்பகுதி மக்கள் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் சுல்தான் தனது நண்பர் திருமலை என்பவருடன் சேர்ந்து அந்த ஆட்டை காரில் திருடி சென்றது தெரிய வந்தது.
திருப்பத்தூர்: வாணியம்பாடி நகராட்சிக்குட்பட்ட அம்பலால் நகரைச் சேர்ந்த அஞ்சலை என்பவருக்குச் சொந்தமான ஒரு செம்மறி ஆடு கடந்த செப்டம்பர் 14-ஆம் தேதி காணாமல் போனது. அப்பகுதி மக்கள் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் சுல்தான், தனது நண்பர் திருமலை… pic.twitter.com/wfKw4tMDy8
— PttvOnlinenews (@PttvNewsX) September 18, 2025
இதையடுத்து ஆத்திரமடைந்த பொதுமக்கள் சுல்தானை அவரது வீட்டில் சிறை பிடித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் சுல்தான் மற்றும் அவரது நண்பர் திருமலையை கைது செய்து திருடுவதற்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர். இது குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
