திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகி ஒருவர் செயின் பறிப்பில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது தமிழக வெற்றிக்கழகத்தைச் சேர்ந்த நிர்வாகி கௌதம் (30). இவர் ஆரணி அருகே ஒரு மூதாட்டிக்கு லிப்ட் கொடுப்பது போல் நடித்து செயின் பறிப்பில் ஈடுபட்டுள்ளார். அந்த வயதான மூதாட்டியை வண்டியில் ஏற்றுவது போல் கௌதம் நாடகமாடி அவரிடம் இருந்த மூன்று பவுன் தங்க சங்கிலியை பறித்துள்ளார்.
இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் வழக்கு பதிவு செய்து கௌதமை கைது செய்தனர். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் கடன் சுமை காரணமாக இந்த குற்ற செயலில் ஈடுபட்டதாக வாக்குமூலம் கொடுத்துள்ளார். இதைத்தொடர்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இந்த சம்பவத்தை தொடர்ந்து கௌதமை தமிழக வெற்றி கழகத்திலிருந்து நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
