தமிழகத்தில் அடுத்த வருடம் 2026 ஆம் ஆண்டு தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் ஒவ்வொரு கட்சியும் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வரும் நிலையில் கூட்டணி தொடர்பான பேச்சு வார்த்தைகள் மாற்றுக் கட்சியினரை தங்களது கட்சியில் இணைப்பது மற்றும் புதிய உறுப்பினர்களை சேர்ப்பது உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது திமுகவிலிருந்து ஏராளமான நிர்வாகிகள் விலகி அதிமுக கட்சியில் இணைந்துள்ளனர்.

அதாவது திருவண்ணாமலையில் முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் திமுக முன்னாள் சேர்மன் காசி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட திமுக நிர்வாகிகள் விலகி அதிமுகவில் இணைந்துள்ளனர். மேலும் திமுக கட்சியின் மூத்த அமைச்சர் எ.வ. வேலுவின் கோட்டையாக  கருதப்படும் திருவண்ணாமலையில் தற்போது முக்கிய நிர்வாகிகள் விலகி அதிமுகவ இணைந்தது பரபரப்பாக பேசப்படுகிறது