உத்திராகண்ட் மாநில தலைநகர் டேராடூனில் உள்ள சஹஸ்ரதாரா சாலையில் நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானா மாநில பதிவு எண் கொண்ட மினி லாரி வேகமாக வந்ததை எதிர்த்து, ரைபூர் கிராசிங் அருகே ஒரு வாலிபர் தடுத்து நிறுத்த முயன்றார். ‘நவீன் கவுத்’ என அடையாளம் காணப்பட்ட அவர், மோட்டார் சைக்கிளில் வந்தபோது, மினி லாரியை நிறுத்த முயற்சித்தார். ஆனால் லாரி ஓட்டுநர் வேகத்தை குறைக்காமல் நேராக அவர்மீது வாகனத்தை ஓட்ட முயன்றது பலரையும் அச்சமடைய வைத்தது.
खनन को लेकर उत्तराखंड में आरोप-प्रत्यारोप तो लगते रहते हैं पर खनन माफियाओं के हौसले किस तरह प्रदेश में बुलंद हैं उसकी एक झलक वीडियो में देख लीजिए।
देहरादून में सहस्त्रधारा रोड पर हरियाणा नंबर का बिना रियर प्लेट वाला ट्रक नो-एंट्री टाइम के बाद जब रायपुर क्रॉसिंग पर बाइक सवार ने… pic.twitter.com/5QceBpZAoF
— bhUpi Panwar (@askbhupi) September 8, 2025
வாகனத்தின் டிரைவர் கேபினில் ஏற முயன்ற நவீன் கவுத், வேகமாக சென்ற லாரியை பிடித்துக்கொண்டு நிலைத்து நிற்க முடியாமல் கீழே விழுந்தார். இந்நிலையில், லாரியை டயர் அருகே விழுந்த அவர் அதிர்ஷ்டவசமாக பிழைத்தார். இந்த பரபரப்பான சம்பவம் அப்பகுதியை சேர்ந்த ஒருவரால் வீடியோ எடுத்துப் பதிவு செய்யப்பட்டது. மேலும், வாகனத்தின் பின் பதிவு எண் இல்லாமல் காணப்பட்டதை போலீசார் உறுதி செய்துள்ளனர்.
சம்பவத்தை தொடர்ந்து லாரி ஓட்டுநர் தப்பி ஓடியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மத்திய பிரதேசத்தின் கந்த்வா மாவட்டத்தில் வேகமாக வந்த கார், பைக்கை மோதி விபத்து ஏற்படுத்தியது. பயங்கர தாக்குதலால் பைக்கில் வந்த நபரின் காலை எலும்பு முறிந்து சிகிச்சைக்காக இந்தூருக்கு அனுப்பப்பட்டது. அந்த வீடியோவும் சிசிடிவி-யில் பதிவு செய்யப்பட்டு பரவி வருகிறது.
