உத்தரப்பிரதேச மாநிலம் புலந்த்ஷேர் மாவட்டத்தில் இருந்து ஒரு அதிர்ச்சி தரும் சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள ஒருவரை கைது செய்ய மஃப்டியில் வந்த போலீசாரை அவர் தள்ளி விட்டு தப்பி ஓடிய காட்சிகள் வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் அஹமத்கர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சேஹ்லா கிராமத்தில் நடந்ததாகத் தெரிகிறது.

 

வீடியோவில், குற்றச்சாட்டுக்குள்ளான நபர், ஒரு போலீஸாருடன் பேசிக் கொண்டிருக்கிறார். அவர் பீடி புகைத்தவாறு, “நான் ஓட மாட்டேன்” என போலீசாரிடம் கூறுகிறார். ஆனால் அடுத்த நிமிஷமே, ஒரு போலீசாரின் கவனம் சிதறிய நேரத்தில், திடீரென அவரைத் தள்ளி மேல்மாடிக்கு ஓடி சென்று, கட்டிடத்தின் கூரையிலிருந்து குதித்து தப்பிக்கிறார். போலீசாரும் பின்னாலே விரைந்தும், அந்த நபரை பிடிக்க முடியாமல் போனது வீடியோவில் தெளிவாகக் காணப்படுகிறது.

இந்த சம்பவத்திற்குப் பின்னர், போலீசார் அந்தக் கிராமத்தின் தலைவர் உட்பட பலரை எதிர்த்து வழக்கு பதிவு செய்துள்ளனர். குற்றவாளியை தப்பவிட உதவினர் என்ற குற்றச்சாட்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது போலீசாரின் செயல்முறையிலும், கிராமப்புறங்களில் சட்டம் ஒழுங்கு நிலைமை பற்றிய கேள்விகளை எழுப்பியுள்ளது. தற்போது இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவி, போலீசாரின் கவனக் குறையை பலரும் விமர்சித்து வருகின்றனர்.