கடற்கரையில் மகிழ்ச்சியாக நேரம் செலவிட நினைப்பவர்கள் மணல் கோட்டை கட்டி விளையாடலாம், ஆனால் குழி தோண்டி விளையாடுவது ஆபத்தானது என்பதற்கு ஒரு சமூக வலைதள காணொளி எடுத்துக்காட்டாக உள்ளது. இந்தக் காணொளியில், சிலர் ஒன்று சேர்ந்து கடற்கரையில் ஆழமான குழி தோண்டி, அதில் கடல் நீரை நிரப்பி உள்ளே அமர்ந்து விளையாடுகின்றனர். ஆனால், ஒரு கட்டத்தில் குழியில் அமர்ந்திருந்தவரால் வெளியே வர முடியவில்லை. கடல் நீர் மண்ணை இழுத்து வந்து, அவரை பாதி மண்ணுக்குள் புதைத்து விடுகிறது, இதனால் வெளியே வருவதில் பெரும் சிரமம் ஏற்படுகிறது.

இதேபோல், இன்னொருவரும் குழியில் சிக்கிக் கொள்கிறார். சுற்றி இருந்தவர்கள் கடினமாக முயற்சி செய்து, தண்ணீரை வெளியேற்றி, பெரும் போராட்டத்திற்குப் பிறகு இருவரையும் பத்திரமாக வெளியே கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம், கடற்கரையில் குழி தோண்டி விளையாடுவது எவ்வளவு ஆபத்தானது என்பதற்கு ஒரு பாடமாக அமைந்துள்ளது. இந்தக் காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி, மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.