குழந்தைகளை, குறிப்பாக கைக்குழந்தைகளை, மிகவும் கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். ஏனெனில், அவர்கள் கையில் எது கிடைத்தாலும் அதை உணவு என்று நினைத்து வாயில் போட்டுவிடும் பழக்கம் கொண்டவர்களாக இருப்பார்கள். இதற்கு ஒரு எடுத்துக்காட்டாக, சமூக வலைதளத்தில் ஒரு காணொளி வெளியாகியுள்ளது. இந்தக் காணொளியில், ஒரு குழந்தை மலைப்பாம்பைப் பிடித்து வாயில் வைத்து சாப்பிட முயற்சிக்கிறது. மற்றொரு குழந்தை தவளையைப் பிடித்து வாயில் போட முயல்கிறது. இன்னொரு குழந்தை குட்டி ஆமையை எடுத்து வாயில் வைக்க முயற்சிக்கிறது.
வேறு ஒரு குழந்தை கல்லை எடுத்து வாயில் போட்டுவிட்டு ஓடுகிறது. இப்படி, வண்டு, எறும்பு, மண்புழு என எதையும் குழந்தைகள் உணவு என்று நினைத்து வாயில் போட முயற்சிக்கின்றனர்.இந்தக் காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இது, குழந்தைகளை ஒரு நொடி கூட கவனிக்காமல் விடக்கூடாது என்பதை பெற்றோருக்கு உணர்த்தியுள்ளது.
