ஒரு சுட்டி குழந்தையின் விளையாட்டுத்தனமான செயல் சமூக வலைதளத்தில் வெளியாகி பலரையும் சிரிக்க வைத்துள்ளது. ஒரு காணொளியில், அந்தக் குழந்தை தான் அணிந்திருந்த சட்டையின் ஜிப்பை தனக்கு இருக்கும் இரண்டு பற்களால் கடித்து மாட்டி வைத்துள்ளது. இந்தக் செயலைப் பார்த்து, குழந்தையின் தந்தை பதறிப்போய் ஜிப்பை எடுக்க முயற்சிக்கிறார். ஆனால், குழந்தையோ எந்த பயமும் இல்லாமல், அமைதியாக அமர்ந்து இருக்கிறது.

இந்தக் காணொளி சமூக வலைதளங்களில் வெளியாகி தற்போது வைரல் ஆகி வரும் நிலையில் நெட்டிசன்கள் வேடிக்கையாக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.