மத்திய பிரதேச மாநிலம், குவாலியர் மாவட்டத்தில் உள்ள ஜான்சி ரோடு போலீஸ் ஸ்டேஷனுக்குட்பட்ட நாகா சந்த்ரவத்னி பகுதியில் நடந்த ஓர் அதிர்ச்சி சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவரை, அவரது நண்பர்கள் பைக்கில் வெளியே அழைத்துச் சென்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.
ग्वालियर: अस्पताल में भर्ती दोस्त को घुमाने निकले बाइक सवार साथी, 16 सेकेंड का वीडियो हुआ सोशल मीडिया पर वायरल।
वायरल वीडियो में बाइक सवार ड्रिप लगाकर घूमते देखे जा रहे हैं, नाका चंद्रवदनी क्षेत्र का बताया जा रहा है वीडियो।#Gwalior #MadhyaPradesh #ViralVideo #ATReel… pic.twitter.com/1XIYHHlYP5
— AajTak (@aajtak) August 28, 2025
16 விநாடிகள் கொண்ட அந்த வீடியோவில், மூன்று பேர் ஒரு மோட்டார் சைக்கிளில் செல்லும் காட்சி இடம்பெறுகிறது. நடுவில் நோயாளி அமர்ந்திருக்க அவரது கையில் IV drip போடப்பட்டுள்ளது. பின் பக்கத்திலிருந்த ஒருவர் அந்த டிரிப் பாட்டிலை கையில் பிடித்து வைத்திருக்கிறார். சிறிது நேரம் சாலையில் ரைடு சென்று அவர்கள், பிறகு மீண்டும் மருத்துவமனைக்குள் நுழைகின்றனர்.
இந்த வீடியோ பொதுமக்களில் சிலரிடம் சிரிப்பையும், சிலரிடம் கோபத்தையும் உருவாக்கியுள்ளது. இது மருத்துவமனை பாதுகாப்பு விதிகளை மீறியதாகவும், அப்படியானால் இது எப்படி நடந்தது எனக் கேட்டுக் கொண்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
