உச்சநீதிமன்றம் டெல்லி–என்சிஆர் பகுதியில் தெருநாய்களை மாற்ற உத்தரவிட்டதை தொடர்ந்து, நாய் பிரியர்கள், விலங்கு ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனிடையே, டெல்லி உள்ளூர்வாசிகள் போராட்டத்தில் ஈடுபடும் வீடியோ ஒன்று இணையத்தில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
அந்த வீடியோவில், போராட்டக்காரர்கள் உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிராகக் குரல் கொடுப்பதோடு மட்டுமல்லாமல், டெல்லி மாநகராட்சி (MCD) ஊழியர்களையும் வெளிப்படையாக மிரட்டுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பூங்காவில் எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் அந்த வீடியோவில், ஒரு ஆண்–பெண் ஜோடி, “எங்கள் நாய்களை பிடிக்க யாராவது வந்தால், அவர்களின் கைகள், கால்களை உடைத்துவிடுவோம்” என்று எச்சரிப்பதுடன் வெளிப்படையாக மிரட்டுகின்றனர். குச்சிகளை சைகை காட்டிய அவர்கள், “எங்கள் பகுதிக்குள் யாரும் நுழையக் கூடாது, வந்தால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்” என்றும் எச்சரித்துள்ளனர்.
அத்துடன், சம்பளத்தை அரசாங்கம் தருவது போலவே நாங்கள் தருவோம், ஆனால் நாய்களை பிடிக்காமல் காப்பாற்ற எங்களுக்கு துணை நிற்க வேண்டும் என தொழிலாளர்களிடம் வலியுறுத்தியுள்ளனர்.
Listen up all your dog haters and@MCD_Delhi
This is the real India.It’s not like those 3rd grade pseudo hindu accounts on x like @theskindoctor1 @UnSubtleDesi @TimesAlgebraIND @VijayGoelBJP @erbmjha #SaveDelhiNCRDogs #nodogsnovote pic.twitter.com/sHBgxtXEsZ
— Confucius (@confuciussays9) August 16, 2025
“>
இறுதியில் அந்தப் பெண், “எங்கள் பகுதியில் நாய்களை எடுக்க வண்டி வந்தால், நாங்கள் ஜெயிலுக்குப் போகத் தயார், உயிரையும் இழக்கத் தயார். இவை பேச முடியாதவை, அவற்றின் குரல் நாங்கள்தான்” என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டுள்ளார். இந்த வீடியோ வைரலாகி, டெல்லி மக்களின் கோபத்தையும், MCD ஊழியர்கள் சந்திக்கும் அச்சத்தையும் வெளிக்கொணர்கிறது.
