ஒடிசாவில் நடைபெற்ற தேர்வின்போது நடந்த அசாதாரண காட்சி தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. தேர்வு அறையில் ஒரு மாணவன் மேசையில் தலை வைத்து தூங்கிவிட்டார்.

அந்தக் காட்சியைப் பார்த்த ஆசிரியர் பிரபாத் குமார் பிரதான், அவரை திட்டாமல், மெதுவாக முதுகில் தடவி அன்புடன் எழுப்பினார். திடீரென்று விழித்த மாணவனைச் சுற்றியிருந்த சக மாணவர்கள் சிரிப்பில் திளைத்தனர், இதைப் பார்த்த ஆசிரியருக்கும் சிரிப்பு அடங்கவில்லை.

இந்த வீடியோவை ஆசிரியர் தாமே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் @sir_prabhat என்ற பெயரில் பகிர்ந்துள்ளார். வீடியோவில், மாணவன் தூங்கிக் கொண்டிருக்கும் போதும், அவரது விடைத்தாள் மற்றும் கேள்வித்தாள் முன் இருப்பதும் தெளிவாகக் காணப்படுகிறது. அந்த தருணம் இணையத்தில் பரவலாக பகிரப்பட்டு, மில்லியன் கணக்கான பார்வையாளர்களை ஈர்த்துள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Prabhat Kumar #science Tr. (@sir__prabhat_)

“>

நெட்டிசன்கள் இந்தக் காட்சியைப் பார்த்து பெரும் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர். “படிப்பு அழுத்தமும் தூக்கமின்மையும் சேர்ந்தால் இப்படிப்பட்ட தருணங்கள் தான் உருவாகும்” என ஒருவர் கருத்து தெரிவித்தார். “ஆசிரியர் திட்டாமல் சிரிப்பால் மாணவனை எழுப்பியது உண்மையில் இதயத்தை கவர்ந்தது” என பலரும் பகிர்ந்துள்ளனர்.

தேர்வு கூடங்களில் இத்தகைய மனிதநேயம் நிறைந்த தருணங்கள் அரிதாகவே காணப்படுகின்றன என்பதால், இந்த வீடியோ மேலும் சிறப்பு பெற்றதாக பயனர்கள் கூறி வருகின்றனர்.