சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், ஒரு குடியிருப்பு சங்க லிஃப்டில் சிக்கிய இளைஞர்கள் தங்களைத் தாங்களே காப்பாற்றிக் கொண்ட வீடியோ தற்போது வைரலாகியுள்ளது. Final Destination படக் காட்சியைப் போன்று பயமூட்டும் அந்த தருணம், நெட்டிசன்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. சம்பவம் எந்த நகரத்தில் நடந்தது என்பது உறுதி செய்யப்படவில்லை என்றாலும், இந்தியாவில் எங்கோ நடந்ததாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
லிஃப்டில் சிக்கிய அந்த இளைஞர்கள், அதிகம் பீதியடையாமல் தங்களே முயன்று கதவைத் திறக்கத் தொடங்கினர். ஒருவரோ லிஃப்டின் பூட்டை வலுக்கட்டாயமாகத் திறந்தபோது, இரண்டு தளங்களுக்கு நடுவே சிறிய இடைவெளி ஏற்பட்டது. அந்த வழியாக குழந்தை முதல் அனைவரும் ஒன்றன்பின் ஒன்றாக குதித்து தப்பினர். யாருக்கும் பெரிய பாதிப்பு ஏற்படவில்லை என்பதே பெரிய அதிர்ஷ்டம்.
The Final Destination!
Group, Stuck In Lift, Manages A Hair-Raising Exit.
Never Panic In Any Situation. pic.twitter.com/84sh8BaQvJ
— BhikuMhatre (@MumbaichaDon) August 16, 2025
“>
இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் அதிர்ச்சி, நகைச்சுவை, பாராட்டு என கலவையான கருத்துகளை பகிர்ந்துள்ளனர். “அது ரொம்ப நெருக்கடியான தருணம்..”, “மஞ்சள் டி-ஷர்ட் போட்டவர் Final Destination படத்தை பார்த்ததே இல்ல போல”, “முதலில் குழந்தையை பாதுகாப்பாக இறக்கியது நல்ல முடிவு.. இளைஞர்கள் தைரியம் காட்டியுள்ளனர்” என்று பலரும் கூறியுள்ளனர்.
எந்த சூழ்நிலையிலும் பீதி அடையாமல் சிந்தித்து செயல்பட்டால் தான் தப்பிக்க முடியும் என்பதற்கே இந்த சம்பவம் உயிரோடு நிற்கும் சாட்சி என சொல்லலாம்.
The Final Destination!
Group, Stuck In Lift, Manages A Hair-Raising Exit.
Never Panic In Any Situation. pic.twitter.com/84sh8BaQvJ
— BhikuMhatre (@MumbaichaDon) August 16, 2025
“>
