சமூக ஊடகங்களில் வைரலாகும் ஸ்டைலெட்டோ சவால் தற்போது பலரையும் ஆபத்துக்கு அழைத்துச் செல்கிறது. சமீபத்தில், இந்த சவாலை முயற்சித்த ஒரு செல்வாக்கு மிக்க இளம்பெண் படுகாயமடைந்த சம்பவம் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சவால் உலகப்புகழ் பெற்ற பாடகி நிக்கி மினாஜின் இசை வீடியோவிலிருந்து தோன்றியது. அவரது வீடியோவில், ஸ்டைலெட்டோ ஹீல்ஸ் அணிந்து ஒரு காலில் சமநிலைப்படுத்தும் காட்சி வைரலானது. இதனைத் தொடர்ந்து உலகம் முழுவதும் சமூக ஊடக பயனர்கள் இதனை பின்பற்றி வீடியோக்கள் வெளியிடத் தொடங்கினர்.

 

View this post on Instagram

 

A post shared by Мариана | материнства | живу жизнь (@mariana_vasiuc)

சவாலைச் செய்தவர் பிரபல இன்ஸ்டாகிராம் பயனர் @mariana_vasiuc. சமையலறையில், மேசை மேல் ஏறி, பாத்திரம் மற்றும் ஊட்டச்சத்து பெட்டியை பயன்படுத்தி சமநிலை செய்ய முயன்றபோது, திடீரென கீழே விழுந்தார். இதில், அவருடைய முதுகுத்தண்டில் பலத்த காயம் ஏற்பட்டதாக முதலீட்டுத் தகவல்கள் தெரிவித்தன.

பிரசவத்திற்குப் பிறகு சில நாள்களிலேயே இந்த சவாலை முயற்சித்தது குறிப்பிடத்தக்கது. இதனால், சமூக ஊடகங்களில் பலரும் இந்த செயலை கடுமையாக விமர்சித்துள்ளனர். “லைக்குகள் மற்றும் பார்வைகள் பெற இது தேவையா?” என பலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலானதும், மெரியானா மற்றொரு வீடியோவை வெளியிட்டு – “முக்கியமாக எதுவும் இல்லை, மருத்துவர் கூறுகையில் இது சிக்கலற்ற முறிவு” என விளக்கம் அளித்தார். “உங்கள் அன்புக்கும் பிரார்த்தனைக்கும் நன்றி. நான் நலமாக இருக்கிறேன்” என்றும் தெரிவித்தார்.

மருத்துவர்கள் இந்த காயத்தை “சுருக்க வளைவு, எளிதாக குணமாகக்கூடிய எலும்பு முறிவு” எனத் தெரிவித்துள்ளனர். அதனால், பயப்படத் தேவையில்லை என்றும், ஆனால் இத்தகைய ஆபத்தான சவால்களை செய்யும்போது மக்களும் கவனமாக இருக்க வேண்டும் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.