திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் சாலையோரம் நிறுத்தப்பட்ட எலக்ட்ரிக் பைக் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடை வாசலில் நிறுத்தப்பட்டிருந்த பைக்கை உரிமையாளர் ஸ்டார்ட் செய்தபோது திடீரென பைக்கில் இருந்து புகை வந்துள்ளது. சில நொடிகளில் தீ குபுகுபுவென எரிந்தது.
இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த மக்கள் என்ன செய்வது என்று அறியாமல் திகைத்தனர். இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் படி தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் பைக் முழுவதும் எரிந்து சாம்பலானது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.
#WATCH | pic.twitter.com/ckfIrZDiih
— Sun News (@sunnewstamil) August 5, 2025
