திருப்பத்தூர் மாவட்டம் கொத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னதம்பி. இவரது மகன் முகிலன். அரசு நிதி உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் 11- ஆம் வகுப்பு படித்து வந்தார். அங்குள்ள விடுதியில் தங்கி முகிலன் பள்ளிக்கு சென்று வந்தார். கடந்த 1-ஆம் தேதி முகிலன் காணாமல் போனதால் திருப்பத்தூர் டவுன் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

அந்த புகாரின் பேரில் போலீசார் நேற்று முன்தினம் பள்ளி வளாகத்தில் தேடிய போது கிணற்றில் முகிலன் சடலமாக மீட்கப்பட்டார் உடனே முகிலனின் பெற்றோர் மகனின் உடலில் காயங்கள் இருந்ததாகவும் அவரை கொலை செய்திருக்கலாம்.

பள்ளி நிர்வாகிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து வேலூரில் இருந்து டாக்டர் பாலாஜி தலைமையிலான டாக்டர். குழுவினர் வரவழைக்கப்பட்டனர். மாணவனின் உடலை பிரேத பரிசோதனை செய்துள்ளனர்.

அதன் அறிக்கை வருவதற்கு இரண்டு முதல் மூன்று நாட்கள் ஆகும். அதன் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர். இருப்பினும் முகிலனின் பெற்றோர் உடலை வாங்க மறுப்பு தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில் முகிலனின் பெற்றோர் மகனின் உடலை வாங்க சம்மதம் தெரிவித்துள்ளனர். முகிலன் உயிரிழந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு இரண்டாவது நாளாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அங்கு போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.