கேரள மாநிலத்தில் உள்ள திருச்சூர் மாவட்டத்தில் வரலாறு காணாத கனமழை பெய்து வருகிறது. அதன் காரணமாக அப்பகுதிகளில் உள்ள ஆறுகளில் வெள்ளம் சீறிப் பாய்கிறது.
இந்நிலையில் அதிரப்பள்ளி ஆற்றில் கரைபுரண்டோடும் வெள்ளத்தில் காட்டு யானை சிக்கிக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது அதிரப்பள்ளி ஆற்றில் ஏற்பட்ட பெரும்பள்ளத்தில் ஆற்றை கடக்க முயன்ற காட்டு யானை ஒன்று சிக்கிக்கொண்டது. அதன் சக்தியை மீறிய வெள்ள நீர் யானையை மூழ்கடித்தும், அடித்து சென்றும் யானையை பெரிதும் கஷ்டப்படுத்தியது.
ஆனால் யானை தனது முழு சக்தியையும் பயன்படுத்தி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்திற்கு ஈடு கொடுத்து தனது உயிரை காப்பாற்றி கொள்வதற்காக தொடர்ந்து முயற்சி செய்து கரையை பாதுகாப்பாக கடந்தது.
வால்பாறை அருகேயுள்ள அதிரப்பள்ளி ஆற்றில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் சிக்கித் தவித்த காட்டுயானை ஒன்று, பெரும் போராட்டத்திற்குப் பிறகு பத்திரமாகக் கரை சேர்ந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது…#coimbatore pic.twitter.com/wiEvmygEH6
— Indian Express Tamil (@IeTamil) July 29, 2025
“>
இதனை அப்பகுதியில் நின்ற சிலர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோ வைரலானதை அடுத்து யானையின் துணிச்சலையும் அது எதிர்கொண்ட சவாலையும் கண்டு பலரும் ஆச்சரியத்தில் உறைந்தனர்.
