உத்திர பிரதேச மாநிலம் பஹ்வால் கிராமத்தை சேர்ந்தவர் சந்தோஷ். இவர் லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி லட்சுமி. இந்த தம்பதியினருக்கு 7 வயதில் மகள் உள்ளார். மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான சந்தோஷ் தினமும் தனது மனைவியுடன் தகராறு செய்து அவரை அடித்து கொடுமைப்படுத்தியுள்ளார்.
இதனால் சந்தோஷை விட்டு பிரிந்து மகளுடன் தாய் வீட்டிற்கு சென்ற லட்சுமி கடந்த 2022-ஆம் ஆண்டு விவாகரத்து கேட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை நடைபெற்று வந்தது. இன்று வழக்கு விசாரணை தொடர்பாக லட்சுமி தனது மகளுடன் நீதிமன்றத்திற்கு வந்துள்ளார்.
அப்போது திடீரென சந்தோஷ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மகள் கண்முன்னேயே மனைவியை கொடூரமாக கத்தியால் குத்தினார். இதனை பார்த்த நீதிமன்ற ஊழியர்கள் அலறியடித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர். பின்னர் ரத்த வெள்ளத்தில் துடித்த லட்சுமியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.
அங்கு 2 மணி நேரம் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி லட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார். மனைவியை கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓட சந்தோஷத்தை பொதுமக்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
