இமாச்சலப் பிரதேசத்தில் வெளிநாட்டுப் பெண் சுற்றுலாப் பயணி ஒருவரிடம் வாலிபர் ஒருவர் பொதுஇடத்தில் தவறான முறையில் நடந்துகொள்ளும் அதிர்ச்சியூட்டும் சிசிடிவி (CCTV) காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பையும், பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இணையத்தில் வேகமாகப் பரவி வரும் அந்த வீடியோவில், மக்கள் நடமாட்டம் உள்ள ஒரு பகுதியில் நடந்து செல்லும் அந்த வெளிநாட்டுப் பெண்ணிடம், பின்னால் வரும் இளைஞர் ஒருவர் அத்துமீறி தவறாகத் தொடுவது போன்ற காட்சிகள் பதிவாகியுள்ளன. இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட நபர் மீது காவல்துறை உடனடியாகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இந்தியாவில் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் நெட்டிசன்கள் பலரும் தங்களது கண்டனக் குரல்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

 

She was traveling through the hills, enjoying the beauty and peace of Himachal with her friend, when a stranger’s inappropriate touch shattered her sense of safety.

For the victim, it doesn’t matter which state, community, or background the perpetrator belongs to. What she will… pic.twitter.com/dIZ51EsFmM

— The Modern Himachal (@themodernhp) June 4, 2026

 

 

இருப்பினும், தற்பொழுது வரை இந்தச் சம்பவம் குறித்து இமாச்சலப் பிரதேச காவல்துறை தரப்பிலிருந்தோ அல்லது மாநில அரசு அதிகாரிகளிடமிருந்தோ முறையான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. மேலும், இணையத்தில் பரவி வரும் அந்தச் சிசிடிவி வீடியோ காட்சிகள் எங்கு, எப்போது எடுக்கப்பட்டது என்பது குறித்தோ அல்லது அதன் உண்மைத்தன்மை குறித்தோ இன்னும் முழுமையாக உறுதிப்படுத்தப்படவில்லை. ஆனாலும், இந்தியாவின் முன்னணி சுற்றுலாத் தலங்களில் ஒன்றான இமாச்சலப் பிரதேசத்தில், வெளிநாட்டுப் பயணிக்கு நேர்ந்ததாகக் கூறப்படும் இந்த அசம்பாவிதம், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு குறித்த விவாதத்தை மீண்டும் ஒருமுறை  தீவிரப்படுத்தியுள்ளது.