கடலூர் மாவட்டம் நெய்வேலியில் ஆரோக்கியதாஸ் (56), லீமாரோஸ்(49) என்று தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். என்.எல்.சி ஊழியரான ஆரோக்கியதாஸ் இரண்டாவது சுரங்கத்தில் எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வருகிறார். இவருடைய நண்பர் தனியார் நிதி நிறுவனத்தில் கடன் வாங்கியுள்ளார். இதற்கு ஆரோக்கியதாஸ் ஜாமின் கையெழுத்து போட்டுள்ளார். இந்நிலையில் ஆரோக்கியதாசின் நண்பர் உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்தார்.
இதனால் அவர் வாங்கிய கடன் தொகையின் மாதத்தவனையை ஆரோக்கியதாசின் வங்கி கணக்கில் இருந்து நிதி நிறுவனம் பிடித்துள்ளது. இதனால் மனமுடைந்த ஆரோக்கியதாஸ் வீட்டில் உள்ள அறையில் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையின் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
