திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஏர்வாடி தளபதிசமுத்திரத்தில் சுவிகரன் (50), லதா (48) இன்று தம்பதியினர் வசித்து வருகிறார். இவர்களுக்கு சுமன்(20) என்ற மகன் இருக்கிறார். சுவிகரன் குடிபோதையில் அடிக்கடி தனது மனைவி மற்றும் மகனுடன் தகராறு செய்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு கூலிபோதையில் வீட்டில் பிரச்சனை செய்த சுவிகரன் தனது மனைவியாக தாக்கியுள்ளார்.
இதையடுத்து ஏற்பட்ட தகராறில் சுவிகரனின் மனைவி, மகன் மற்றும் லதாவின் சகோதரி சுபா(40) ஆகியோர் சேர்ந்து சுவிகரனை தாக்கியுள்ளது தாக்கினார் இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் மூன்று பேரையும் கைது செய்தனர். இதை தொடர்ந்து அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
