திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் 10 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்குள்ளான சம்பவம், தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூரமான சம்பவம் தொடர்பாக போலீசார் கடந்த 12 நாட்களாக பல்வேறு கோணங்களில் விசாரணையை தீவிரமாக நடத்தி வருகின்றனர்.
குற்றவாளியின் சிசிடிவி காட்சி மற்றும் பிற தகவல்களின் அடிப்படையில் மாநிலம் முழுவதும் ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் பொது இடங்களில் தேடுதல் நடக்கின்றது. இந்நிலையில் தற்போது ஆந்திரா மாநிலம் சூலூர்பேட்டையில் உள்ள ரயில்வே ஸ்டேஷனில் சம்பவத்தின் போது இருந்த உடையில் இருந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில் அவர் மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.
