சென்னையில் பல குழந்தைகளைக் கடத்தி பல லட்சம் ரூபாய்க்கு விற்பதாக சமீபத்தில் ஆடியோ ஒன்று வெளியானது. அதில் குழந்தை விற்பனை தொடர்பான உரையாடல்கள் இருந்தது. இதை வைத்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். இந்நிலையில் குழந்தை கடத்தல் தொடர்பாக வித்யா என்ற இளம் பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர். இவர் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் உள்ள குழந்தைகளை கடத்தி குழந்தை இல்லாத தம்பதிகளிடம் ரூபாய் 10 லட்சம் முதல் 15 லட்சம் வரை பேரம் பேசி விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.
இதையடுத்து காவல்துறையினர் அவருடன் நடத்திய விசாரணையில் அம்பத்தூர், ஓடகடம் பகுதியில் கடத்தி வைக்கப்பட்டு இருந்த 2 குழந்தைகளை காவல்துறையினர் மீட்டனர். இந்த கடத்தல் கும்பல் பெரிய கும்பலாக பல நாட்களாக செயல்பட்டு வந்திருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகம் அடைந்துள்ளனர். இது தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
