பஞ்சாப் மாநிலத்தில் இந்தியா, பாகிஸ்தான் எல்லை உள்ளது. அந்த எல்லையில் பாகிஸ்தானை சேர்ந்த ஆறு ட்ரோன்களை இடைமறித்து எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டனர். அமிர்தசரஸில் மோதே என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 5 ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்டது.

அதேபோன்று அட்டாரி கிராமத்தில் ஒரு ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்டது. அத்துடன் துப்பாக்கிகள், குண்டுகளை நிரப்பும் மூன்று மெகஜின்ஸ் 1.070கி.கி. ஹெராயின் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளது.