பொதுவாகப் போலீஸ் என்றாலே குற்றவாளிகளுக்குக் கதிகலங்கும், ஆனால் அதற்கு முற்றிலும் மாறாகப் போலீஸ் நிலையத்திற்குள் கம்பிக்கு பின்னால் நின்றுகொண்டே குற்றவாளிகள் இருவர் தங்களின் மீசையை முறுக்கி செம கெத்தாகப் பத்திரிகையாளர்களுக்குப் போஸ் கொடுத்த விசித்திரமான வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி நெட்டிசன்களைக் கடும் கொந்தளிப்படையச் செய்துள்ளது.
காவல் நிலையம் ஒன்றில் கைது செய்யப்பட்ட இரண்டு குற்றவாளிகளைப் போலீசாருக்கு முன்னால் நிறுத்தி ஊடகங்களுக்குப் பேட்டி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது அங்கு வந்த செய்தியாளர்கள் மற்றும் புகைப்படக் கலைஞர்கள் தங்களின் கேமராக்களைத் தூக்கியதும், அந்தப் பக்கிரிகள் இருவரும் தாங்கள் ஏதோ தவறு செய்துவிட்டு போலீசிடம் மாட்டியிருக்கிறோம் என்ற பயமே இல்லாமல், கேமராவைப் பார்த்து மீசையை முறுக்கிக்கொண்டு, ஏதோ பெரிய சாதனை செய்துவிட்டு போட்டோஷூட் நடத்துவது போலப் புன்னகையுடன் போஸ் கொடுத்துள்ளனர்.
View this post on Instagram
அவர்களுக்கு முன்னால் நாற்காலியில் உயர் போலீஸ் அதிகாரிகள் அமர்ந்திருக்கும் போதே, சட்டத்தை மதிக்காமல் அவர்கள் காட்டிய இந்த அதிரடி ஓவர் பில்டப் ஒட்டுமொத்த காவல்துறைக்கே சவால் விடுவது போல் அமைந்துள்ளது. இன்ஸ்டாகிராமில் @ghantaa என்ற பக்கத்தில் பகிரப்பட்டு லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்று வரும் இந்த வைரல் வீடியோவைப் பார்த்த இணையவாசிகள், “இவனுங்களுக்கு இன்னும் போலீஸ் கவனிப்பு ஒழுங்கா கிடைக்கல போல, அதான் இவ்வளவு கொழுப்பு” என்றும், “போலீஸ் ஸ்டேஷனுக்கு வரல, ஏதோ மாமனார் வீட்டுக்கு வந்த மாதிரி மீசையை முறுக்குறானுங்க” என்றும் கமெண்ட் பாக்ஸில் தங்களின் ஆத்திரத்தைக் கொட்டி தீர்த்து அந்தப் பக்கிரிகளை வறுத்தெடுத்து வருகின்றனர்.
