ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பாணாவரம் அருகே மேட்டு குன்னத்தூர் பகுதியை சேர்ந்த சரவணன் என்பவர் மகன் புவனேஸ்வரன் (7), கோபி என்பவரின் மகன்கள் போனி பிரசாத்(9), சுஜன்(7) ஆகிய சிறுவர்கள் இன்று அந்த கிராமத்தின் அருகே உள்ள குட்டைக்கு குளிக்க சென்றுள்ளனர்.
அப்போது குளித்துக் கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக ஆழமான பகுதியில் நீரில் மூழ்கியுள்ளனர். இதனை கண்ட அப்பகுதியில் நின்ற சில சிறுவர்களை மீட்க முயற்சி செய்து முடியாமல் போனது.
உடனே தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து அறிந்த தீயணைப்பு துறை என சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 3 சிறுவர்களையும் மீட்டனர்.
பின்னர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர்களை பரிசோதித்த மருத்துவர் மூன்று பேருமே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து மூவரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
