திருவள்ளூர் அருகே சரக்கு ரயிலில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மற்றும் அரக்கோணம் வழித்தடத்தில் திருவள்ளூர் அருகே சரக்கு ரயிலில் தீப்பிடித்து ஐந்து பெட்டிகள் பற்றி எரிந்தது. இந்த கோர விபத்தால் சென்னை அரக்கோணம் வழித்தடத்தில் தற்போது ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

பற்றி எரியும் தீயை கட்டுப்படுத்த முடியாமல் தீயணைப்பு துறையினர் போராடி வருகின்றனர். இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் பிரதாப், மாவட்ட எஸ்பி சீனிவாச பெருமாள், அமைச்சர் நாசர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். இந்த நிலையில் டீசல் டேங்கர் ரயிலில் பற்றிய 7 மணி நேர போராட்டத்திற்கு பிறகு முழுமையாக அணைக்கப்பட்டுள்ளது.

இந்தக பயங்கர தீ விபத்தில் 12 கோடி ரூபாய் மதிப்புள்ள டீசல் தீயில் எரிந்து நாசமானது. டேங்கருக்கு 70 ஆயிரம் லிட்டர் வீதம் மொத்தமாக 18 டேங்கர்களின் 12.60 லட்சம் லிட்டர் டீசல் நிரப்பப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.