சென்னை திருவொற்றியூரில் உள்ள மக்கள் மருந்தகத்திற்கு நேற்று இரவு மர்ம நபர்கள் சிலர் வந்துள்ளனர். அவர்கள் பூட்டி இருந்த மருந்தகத்தின் பூட்டை உடைத்து ரூ. 30,000 பணத்தை திருடி சென்றுள்ளனர். இதையடுத்து அருகில் இருந்த மளிகை கடை பூட்டையும் உடைக்க முயற்சி செய்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மர்ம நபர்களை பிடிக்க அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில் மர்ம நபர்கள் கொள்ளையடித்து செல்லும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.