மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள ரேவா மாவட்டத்தில் குடியிருப்பு பகுதிகள் அமைந்துள்ளது. இந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டு தோட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 9 வயது  சிறுமி சடலமாக மீட்கப்பட்டார். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்தது தெரியவந்தது. இது தொடர்பாக சிறுமியின் குடும்பத்தினர் உட்பட சுமார் 50 பேரிடம் காவல்துறையிடம் விசாரணை நடத்தினர். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளது. அதாவது அந்த சிறுமியை அவளுடைய உடன்பிறந்த அண்ணனே பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளார்.

அந்த சிறுவனுக்கு 15 வயது ஆகும் நிலையில் தொடர்ந்து ஆபாச படங்கள் செல்போனில் பார்த்து வந்துள்ளார். அவர் தொடர்ச்சியாக ஆபாச படங்கள் பார்த்த நிலையில் அன்றைய தினம் இரவு தன் அருகில் படுத்திருந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அந்த சிறுமி தந்தையிடம் நடந்த விஷயங்களை கூறப்போவதாக கூறினார். இதனால் பயந்து போன அச்சிறுவன் கழுத்தை நெரித்து தங்கையை கொலை செய்தார். அதன்பின் பயந்து போன சிறுவன் தன் தாயாரிடம் நடந்த விஷயங்களை கூறிய நிலையில் தன் மகனைக் காக்க அவரும் கொலையை மூடி மறைத்து விட்டார். இது சிறுவனின் மூத்த சகோதரிகள் இருவருக்கும் தெரிந்துள்ளது. இருப்பினும் யாரும் விஷயத்தை வெளியே கூறவில்லை. மேலும் சிறுவனின் தாய் மற்றும் 2 சகோதரிகள் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.