
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், இன்னைக்கு தமிழ்நாட்டில் கடுமையான அதிருப்தி. சட்டம் ஒழுங்குல இருந்து… விலைவாசியிலிருந்து…. சொத்து வரியிலிருந்து…. வீட்டு வரியிலிருந்து… மின்சார கட்டணம் உயர்வில் இருந்து.. அதேபோல எல்லா தலித் சமுதாயத்துக்கு மிகுந்த கொடுமைகள்…. இப்படி எல்லாத்தையும் மக்கள் சீர்தூக்கி பாக்குறாங்க
இன்னைக்கு பாத்தீங்கன்னா…. அண்ணா திமுக வாக்களிப்பது மூலம்தான் இவருக்கு ஒரு எச்சரிக்கை. திமுகவுக்கு ஒரு எச்சரிக்கை… அவங்க திருந்தபோது கிடையாது… எப்படிப் பார்த்தாலும் 2026இல் நாங்க தான் வரப்போறோம், அது வேற விஷயம. இன்னைக்கு அந்தளவுக்கு ஊழலும் கரை புரண்டு ஓடி, எங்கும் எதிலும் ஊழல்.
கீழே உள்ளாட்சியில் இருந்து மேல வரைக்கும் ஊழல் செய்து அந்த அளவுக்கு மக்கள் வெறுக்கத்தக்க ஒரு ஆட்சி. ஒரு அன் பாப்புலர் கவர்ன்மெண்ட் அப்படின்னா… திராவிட முன்னேற்றக் கழகம், இந்த விடியாத அரசு. அந்த வகையில், DMK குழுக்கள் அமைத்து, எவ்வளவு முன்னாடி போய் சீட்டு போட்டாலும் சரி, தேர்தலில் ஒருபோது அவங்க ஜெயிக்க போறது கிடையாது என பேசினார்.