
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீட்டில் சோதனை. நான் அனுப்பும் சோதனைகள் அல்ல…. மத்திய அரசு செய்கின்ற சோதனை… அவர்தான் சொல்லிட்டாரே எனக்கு பயம் இல்லைன்னு சீமான் சொல்லி இருக்கிறார்.
ஒன்னும் இல்லாட்டி, ஒன்னும் இல்லையே…. மடியில கணம் இல்லாட்டி வழியில பயம் இல்ல இல்லையா? அதனால அவர் ஒன்றும் இல்லைன்னு சொல்றாரு. அவங்க பார்த்துட்டு போவாங்க…. எதும் உண்மை இருந்தால் அவங்க சந்திச்சுக்குவாங்க….. அதுக்கு நான் என்ன கருத்து சொல்றது…. என் வீட்ல இன்கம் டேக்ஸ் ரைடு வந்துச்சு, போய் மத்த கட்சி தலைவர்கள் கிட்ட கேட்டீங்களா என்பது எனது கருத்து ? என பேசினார்.
சமத்துவ மக்கள் கட்சி பிஜேபியுடன் தான் கூட்டணி வைக்கணும் என்று ஆர்வமாக இருப்பதாக தெரிகின்றது என்ற கேள்விக்கு பதிலளித்த சரத்குமார்,
நல்ல செய்தி. அது பாப்போம். பரிசீலினை பண்ணுவோம் என பேசினார். பிற்படுத்தப்பட்டோர், ஏற்றத்தாழ்வு, ஏழை – பணக்காரர், ஜாதி , மதத்திற்கு அப்பாற்பட்டவன் நான். அதனால எனக்கு பிற்படுத்தப்பட்டோர் அப்படியெல்லாம் எந்த எண்ணமும் கிடையாது. எல்லாரும் சமம் என்று நினைக்கிற நான், சமத்துவ கட்சியின் தலைவர். அதனால எல்லாரும் சமம் என பேசினார்.