செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் மன்சூர் அலிகான், தேசிய ஜனநாயக புலிகள் என எங்கள் கட்சியின் பெயரை வைத்திருக்கிறோம்.  நாங்கள் பாய்வதற்காகத்தான் புலிகள்..  பதுங்குவதற்கானவர்கள் அல்ல. திராவிட கட்சிகளை தாண்டி மக்களிடம் கண்டிப்பா போவோம்,  பார்க்க தானே போறீங்க…  அவங்க ரொம்ப நாள் ஆண்டுட்டாங்க…. ஆண்டுட்டாங்க,  அனுபவிச்சிட்டாங்க…  பழம் தின்னு கொட்டை போட்டுட்டாங்க…  நாங்க பழம் திங்காமலேயே கொட்டை போடுவோம்…  அதுதான் இந்திய ஜனநாயகப் புலிகள்…

அரசியலில் செயல்படுவதற்கு பெரும் பொருட்ச் செலவு தேவைப்படும். நாங்கள் துண்டு ஏந்தி பிச்சை எடுப்போம்….   ஆண்டவனை நம்பி இறங்கிட்டோம்.  தெருவுல போவோம்.  இப்போ நடிகர் சங்கம் எதுக்கு சொன்னேன்.  தனியா கட்டக்கூடாது,  கடன் வாங்கி கட்ட கூடாதுன்னு…  அதே மாதிரி தான் இதுலயும் நான் சொல்றேன்.  நடிகர் சங்கம் என்பது ஒரு கட்டடம் அல்ல, அது ஒரு இதய கோவில். பல ஆன்மாக்கள்,  பல நடிகர்கள்…

எம்ஜிஆர்,  சிவாஜி கணேசன்,  எஸ்.எஸ்ஆர் அவர்கள்,  மேஜர் சுந்தர்ராஜன் அவர்கள்,  ராமசாமி அவர்கள்…  அந்த மாதிரி   பிரேம் நசீர்,  கன்னட நடிகர் ராஜ்குமார்…  அப்புறம் நாகேஸ்வர ராவ்…  இப்படி நூற்றுக்கணக்கான நடிகர்களின் இதயமாக, அவர்களின் புகலிடமாக அது விளங்குகிறது.

அதனால் அது ஒரு கோவில் போன்ற இடம் அப்படிங்கறதால் மடி ஏந்தி ஏந்தி பிச்சை எடுத்தாவது அனைவரிடமும் வாங்கி கட்டணும் என்பது நோக்கம். அந்த மாதிரி நாங்க மக்கள் தருகின்றதை  வச்சு,  நாங்க செலவழிச்சு,  நிச்சயமாக போராட முடியும்.  போராடுவதற்கு பெரிய நிதி இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. மிகப்பெரிய ஒரு கூட்டணி அமைப்போம். DTI  அசைக்க முடியாத நம்பிக்கையாக….  உண்மையான தமிழகத்தின் விடியலாக அமையும் என தெரிவித்தார்.