திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா,  ரொம்ப வினோதமானது. தமிழக போலீஸ் கோர்ட்டில் ஒரு ஸ்டாண்ட் எடுக்குறாங்க... 22ஆம் தேதி காவல்துறையில் என்ன சொல்றாங்க ? நாங்க யாருக்கும் தடை விதிக்கவே இல்லை.  எல்லா டீடைலும் அவங்களே குடுக்குறாங்க…  எங்களிடம் 252 பேர் அனுமதி கேட்டதுல,  நாங்க 248 பேருக்கு தான் கொடுக்கல என்று போலீஸ் சொல்லுது…

அப்படின்னா…  என்ன அர்த்தம் ? தடை இல்லைன்னு அர்த்தமா ? தடை செய்கிறார்கள் என்று அர்த்தமா ?  4  பேருக்கு தான் கொடுத்து இருக்குது.  ஆக வாய்மொழியாக எல்லா இடத்திலும்,  அறநிலையத்துறை மாதிரி ஒரு புழுகினி துறை வேறு ஏதும் கிடையாது.  அறநிலையத்துறையில் ஒரு ஒரு கோவிலில் இருக்கிற அச்சகர்கள்,  பரம்பரை தர்மகர்த்தாக்களை….

சேகர் பாபுவா ? இல்ல அல்லோலூயா  பாபுவா ? தெரியல….  அவரோட எடுபிடிகள்….  அந்த துறையில் இருக்கிற அதிகாரிகள் நேரடியா போன் பண்ணி பேசுறாங்க… நான் 20ஆம் தேதியே ஊடக நண்பர்களிடம்  பேட்டி கொடுத்து இருக்கிறேன்…  என்னன்னு சொன்னால் கோவில் பெயரை சொல்லியே பேசுனேன். கடையநல்லூர் கிட்ட கிருஷ்ணாபுரம் வயக்காட்டு ஆஞ்சநேயர் கோவில் இருக்கு. அந்த கோவில் பரம்பரை தர்மகர்த்தா…

21 வருஷத்துக்கு முன்னாடி deposed (  பதவி பறிக்கப்பட்டது) பண்ணினார்கள். அவர் சுப்ரீம் கோர்ட் வரை போய் reinstate ( மீண்டும் பதவி ) பெற்று இருக்காரு…  அவர்கிட்ட போய்  EO சொல்றாரு…  நீங்க ஜென்ம பூமியின் போது பிரசாதம் கொடுக்கக் கூடாது,  பூஜை பண்ணக்கூடாது என சொல்லி உள்ளார். அவர் எழுத்துப்பூர்வமாக கேட்டுள்ளார். உடனே எங்க whatsappல இருக்கு பார்த்துக்குங்க என EO சொல்லி உள்ளார். ஆக இந்த அரசாங்கமே ஹிந்து மதவிரோதம்,  பிஜேபி விரோதம் அந்த மாதிரி செயல்படக்கூடியது.

இன்னும் சொல்லப்போனால் சுப்ரீம் கோர்ட்ல போலீசுக்கு என்ன தலையெழுத்து ? இந்த அரசாங்கம் இந்து விரோத அரசாங்கம் என்று நிரூபிக்க, சில பேருக்கு நினைக்கிறாங்க,  உங்களுக்கு என்ன அரிப்பு என  கேட்கிறேன்…  ஏன் நீங்க ஏன் பேசுறீங்க ? அரசியல் ரீதியா இந்த அரசாங்கம் இந்து விரோதி தான்….  ஏன்னா புதுசா பஸ் ஸ்டாண்ட் தொறந்து இருக்காங்களே….  கிளாம்பாக்கத்தில் முப்பது வருஷம் இருந்த கோவிலை இடிச்சாங்களா ? இல்லையா ? அதுக்கு காக்கி சட்டை போட்ட ஆட்கள் பாதுகாப்புக்கு போனாங்களா ? இல்லையா? அப்பொழுது தமிழ்நாடு போலீஸ் ஆன்ட்டி ஹிந்து என்றுதானே அர்த்தம் என கொந்தளித்தார்.