துக்ளக் ஆண்டு விழாவில் ஆடிட்டர் குருமூர்த்தி கேள்வி மற்றும் பதில்கள் வழங்கினார்.அதில் பேசிய அவர்,  தமிழ்நாட்டில் பிஜேபி 60% தொகுதி வருமா ? என்று நீங்கள் கேட்டீர்கள் என்றால்,  அதற்கு என்னால் பதில் சொல்ல முடியாது. ஆனால் பிஜேபி இந்த தேர்தலில் தனியாக நின்றால் கூட பெருமளவில் வாக்குகள் வாங்கும் என்பது மட்டும் தெரியும். சில தொகுதியில் ஜெயிக்க கூடிய முடியும். பல தொகுதிகளில் அவர்கள் இரண்டாவது ஸ்தானத்தில் கூட வர முடியும் என்று சொல்லுகிறார்கள்…  இந்த தேர்தலில் தான் தெரியுமே தவிர,  இதற்கு முன்னால் கணிக்க முடியும் என்று தோன்றவில்லை..

மோடி தான் இப்போ உலக தலைவரே…. இந்த நாட்டிற்கே ஒரு பெரிய உயர்வு வந்திருக்கிறது.  அதுல மோடிக்கு பெரிய பங்கு இருக்கிறது. ஏனென்றால் அந்த  மாதிரி முடிவுகள் எடுத்தார்கள். அதனால் மோடி பெரிய தலைவரா  இனிமே உருவாகுவாரா ? என்று இல்லை…  உருவாகி இருக்கிறார் என்பதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். எப்பவுமே ஒரு தலைவரை வைத்து தான் வாய்ப்பு இருக்கிறதா ? இல்லையா ? என்று பார்ப்போம். தலைவர் ரொம்ப முக்கியம்…

மோடி ஒரு தலைவராய் உருவாக்குவதற்கு பெரிய  கட்சி… அதன்  சித்தாந்தம்….  அதற்கு பின்னால் இருக்கின்ற தொண்டர்கள் தான் இருந்தார்கள்… மோடி தலைவரா தனி மனிதராக உருவாகவில்லை. அதுபோல தமிழ்நாட்டில் ஒரு மாற்றம் வர வேண்டும்…  திராவிட சித்தாந்தத்திற்கு மரியாதை குறைந்து கொண்டிருக்கிறது.

பின்னாடி பேசுகிறேன் எப்படி என்று ? அதற்கு மாற்றுக் கொண்டு வருவதற்கு பெரிய முயற்சியை  இன்றைக்கு பாஜக செய்து கொண்டிருக்கிறது. அதற்கு ஒரு வெற்றி வர வேண்டும்.  நாம் எல்லோரும் நினைக்கிறதும் அது தான்.  அது இப்பொழுது தான் நடக்கும்,  நாளைக்கு நடக்குமா ? இவர் மூலமாக அப்படி நடந்து விடுமா ? என்று கேட்டால் அதற்கு பதில் சொல்ல முடியாது என தெரிவித்தார்.