இந்தியாவில் ஊழியர்களின் நிதி எதிர்காலத்தை பாதுகாப்பதில் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு முக்கிய பங்கு வகித்து வருகிறது. தற்போது ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பை EPFO வெளியிட்டுள்ளது. அதாவது ஊழியர்களுக்கு நிபந்தனைக்கு உட்பட்டு 50 ஆயிரம் ரூபாய் இலவசமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் ஊழியர்கள் தங்களுக்குரிய ஊதியத்தில் இருந்து குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்வதன் மூலமாக அவர்களுக்கு ஓய்வூதிய வழங்கப்படும். இது அவர்களின் முதுமையை சீராக கழிக்க உதவும். இந்த பணத்தை பணியின் போது ஊழியர்கள் எடுத்துக் கொள்ளலாம்.

EPFO தொடர்பான விதிகளில் loyalty come life ஒன்று. இதன் மூலமாக பிஎஃப் அக்கவுண்ட் வைத்திருக்கும் ஊழியர்கள் ஐம்பதாயிரம் ரூபாய் வரை இலவசமாக பெற முடியும். ஒரு நிறுவனத்தில் இருந்தே மற்றொரு நிறுவனத்திற்கு மாறும்போது அதே பி எப் அக்கவுண்டில் பங்களிக்க வேண்டும். இப்படி 20 ஆண்டுகளாக ஒரே pf அக்கவுண்டில் பங்களித்த பிறகு தான் இந்த நன்மையை பெற முடியும்.

சமீபத்தில் இபிஎப்ஓ கணக்குகளில் 20 வருடங்களாக தொடர்ந்து பங்களிக்கும் வாடிக்கையாளர்களுக்கு loyalty come life திட்டத்திற்கு இந்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. ஒரே pf அக்கவுண்ட் இருபது வருடங்களாக பயன்படுத்துபவர்களுக்கு கூடுதலாக 50,000 ரூபாய் கிடைக்கும். அதே சமயம் அடிப்படை சம்பளம் ஐந்தாயிரம் ரூபாய் உள்ளவர்கள் 30 ஆயிரம் ரூபாயும், ஐந்தாயிரம் முதல் பத்தாயிரம் ரூபாய் வரை உள்ளவர்கள் 40 ஆயிரம் ரூபாயும், பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்குபவர்கள் ஐம்பதாயிரம் ரூபாயும் பெறுவார்கள்.