ரயிலில் பயணம் செய்யும்பொழுது பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளுக்கு டிக்கெட் எடுக்க வேண்டுமா? என்ற சந்தேகம் இருக்கும். பேருந்துகளில் பாதி டிக்கெட் வசூல் செய்வார்கள். குறிப்பிட்ட வயதை தாண்டினால் முழு டிக்கெட் எடுக்க வேண்டியது வரும். ஆனால் கை குழந்தையாக இருந்தால் டிக்கெட் எடுக்க வேண்டியதில்லை. இது போல ரயில்களிலும் இதுபோன்ற விதிமுறை இருக்கிறதா என்றால், இருக்கிறது. பெரும்பாலான பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளுக்கு டிக்கெட் புக் செய்வதில்லை.

அவர்களுடன் ரயிலில் கூட்டி சென்றாலும் ரயில்வே அதிகாரிகள் கேட்க மாட்டார்கள். உண்மையில் இதற்கான விதிமுறைதான் என்ன என்றால், விதிமுறைப்படி ஐந்து வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு ரயில்களில் டிக்கெட் கட்டணம் கிடையாது.  அவர்கள் இலவசமாக பயணம் செய்யலாம். ஆனால் அந்த குழந்தைகளுக்கு தனியாக சீட்டு வேண்டும் என்று நினைத்தால் அவருடைய பெயறில் டிக்கெட் புக் செய்யலாம். அவர்களுக்கு தனி சீட்டு கிடைக்கும். ஆனால்  கைக்குழந்தைக்கு சீட் கிடையாது.