வாடிக்கையாளர்களின் உண்மை தன்மையை சரிபார்க்க கேஸ் நிறுவனங்கள் அவர்களின் கைரேகை பதிவு செய்து வருகின்றன. பலர் கைரேகை பதிவு செய்யாமல் இருக்கும் நிலையில் அவர்களால் கேஸ் சிலிண்டர் பெற முடியாதா என்று அச்சம் எழுந்துள்ளது. இந்த நிலையில் இது குறித்து விளக்கம் அளித்துள்ள எண்ணெய் நிறுவனங்கள், கைரேகை பதியா விட்டாலும் வாடிக்கையாளர்கள் கேஸ் சிலிண்டர் பெறலாம் என தெரிவித்துள்ளது.