கர்நாடகா குடகு மாவட்டம் சோமவார்பேட்டை தாலுகாவில் வசித்து வரும் 23 வயது இளம்பெண்ணுக்கும், துமகூரு மாவட்டத்தை சேர்ந்த 27 வயது இளைஞருக்கும் திருமணம் நிச்சயக்கப்பட்டது. இவர்களின் திருமணம் கடந்த மே 6ஆம் தேதி நடைபெற இருந்த நிலையில் சோமாவார்பேட்டை டவுனில் உள்ள திருமண மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக மணமக்கள் மேடையில் இருந்த போது திருமண விருந்து தகராறு ஏற்பட்டது. அப்போது சாப்பாட்டு இலையில் சம்பிரதாயபடி முதலில் இனிப்பு தான் வைக்க வேண்டும். இனிப்பு வைக்காமல் நிராகரித்து விட்டதாகவும் தங்களுடைய சம்பிரதாயத்தை அவமதிப்பதாகவும் பிரச்சனை ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் இரு வீட்டருக்கும் வாக்குவாதம் முற்றி தள்ளுமுள்ளு ஏற்பட்ட நிலையில் மணமகன் வீட்டார் திருமணம் வேண்டாம் என்று கூறியுள்ளனர்.

பிறகு இரவு முழுவதும் நடந்த பேச்சு வார்த்தையில் பெண்ணின் கழுத்தில் தாலி கட்ட தயார் என்று மணமகன் தெரிவித்த நிலையில் மணமகள் திருமணத்தை நிறுத்தியுள்ளார். குடும்பத்தினர் சமாதானப்படுத்தியும் மணப்பெண் சம்மதிக்கவில்லை. பிறகு போலீசில் புகார் அளிக்கப்பட்ட திருமண செலவுகள் அதிகமாக செய்யப்பட்டு இருப்பதால் தனது பெற்றோர் நஷ்டம் அடைந்து விட்டதால் அந்த செலவுகளை மணமகன் வீட்டார் தரவேண்டும் என்று மணப்பெண் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து திருமண ஏற்பாடுகளுக்கான செலவுகளை மணமகன் வீட்டாரிடம் இருந்து போலீசார் பெற்று தந்தனர். இலையில் இனிப்பு வைக்காததால் திருமணம் நின்று போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.