சூர்யா சுரேந்திரன் (23) என்ற இளம் பெண்ணுக்கு நேற்று லண்டனில் செவிலியராக பணிபுரிய வேலை வாய்ப்பு கிடைத்தது. அதை தொலைபேசியில் நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டாடும் போது, தெரியாமல் நச்சுத்தன்மையுள்ள அரளிப் பூவை (Nerium oleander) மென்று சாப்பிட, லண்டன் செல்ல கொச்சி விமான நிலையத்துக்கு செல்லும் வழியில் அவருக்கு வாந்தி ஏற்ப்பட்டது.

இதையடுத்து மயக்கம் ஏற்பட, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, சூர்யா பூக்கள் மெல்லுவதை மருத்துவர்களிடம் தெரிவித்தார். பின் சிகிச்சை அளித்தும் பலனின்றி மலரின் நச்சுத்தன்மையால் சூர்யா மாரடைப்பால் இறந்தது அவரது உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

அரளி பூக்கள், இலைகள் மற்றும் வேர்கள் அனைத்தும் விஷம். பூவில் உள்ள ஆல்கலாய்டுகள் நேரடியாக இதயத்தை பாதித்து இதய செயலிழப்பை ஏற்படுத்தும்.     இந்நிலையில் எளிதாக கிடைக்கும் வகையில் வீட்டின் அருகே அரளி நடவு செய்யப்பட்டிருந்தால் அதை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள கூறி சம்பவம் அறிந்த சமூக ஆர்வலர்கள் இது குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.