வெஸ்ட் நைல்ஸ் ஃபீவர் என்ற புதிய வகை காய்ச்சல் கேரள மாநிலத்தில் மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. திருச்சூர், மலப்புரம் மற்றும் கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களில் இந்த காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து அனைத்து மாவட்டங்களும் விழிப்புடன் இருக்க வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த வகை காய்ச்சல் கியூலெக்ஸ் கொசு மூலம் மனிதர்களுக்கு பரவுகிறது எனவும் இதற்கு இதுவரை மருந்து அல்லது தடுப்பூசி எதுவும் இல்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மக்கள் மிகுந்த கவனத்துடன் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருப்பது அவசியம். கொசுக்கள் வளரும் வகையில் தண்ணீர் தேங்காய் விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.