செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,   ஆணவ ராஜா  2G ஸ்பெக்ட்ரம் ஊழல் புகழ்,  ஒரு தராதரம் இல்லாத….  ஒரு மனித பிறவியே இல்லாத ஒரு ஈனப்பிறவி. அந்த ஈனப்பிறவி இமயம் போல் உயர்ந்திருக்கின்ற…. இதயம் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களை பற்றி,  சிறுமைப்படுத்துகின்ற வகையிலே அவர் அந்த வார்த்தையை கடுமையாக உபயோகித்ததற்கு தமிழ்நாடு முழுவதும் கடுமையான எதிர்ப்பு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எங்களுடைய பொதுச்செயலாளரும்கண்டனத்தை கடுமையாக தெரிவித்து இருக்கும் நிலையில்,

இன்றைக்கு அந்த ஆணவ ராசா,  ஈன பிறவிக்கு ஒரு கண்டன தீர்மானம் கூட  நிறைவேற்றப்பட்டிருக்கின்றது.   இன்றைக்கு பாராளுமன்ற தேர்தல் விரைவிலேயே,  எந்த நேரத்திலும் அறிவிக்கப்படலாம். எனவே அப்படி அறிவிக்கப்படும்போது அம்மாவுடைய பேரவை மட்டுமல்ல,  எல்லா சார்பு அணிகளும், அதேன்று கழகத்தின் உடைய செயல் வீரர்கள்,  வீராங்கனை அனைவருமே ஒற்றுமை உணர்வோடு தேர்தலை எதிர்கொண்டு திமுகவை , அதன் கூட்டணி கட்சிகளை, புறமுதுகிட்டு  ஓடச் செய்து,  பிஜேபியை கூட புறமுதுகிட்டு  ஓடச் செய்து,

வெற்றி கண்டு 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு ஒரு அச்சாரமாக இந்த தேர்தல் இருக்கும்.  மீண்டும் நம்முடைய அம்மாவுடைய அரசு,  நம்முடைய அண்ணன் எடப்பாடியார் கழகப் பொதுச் செயலாளர் தலைமையில் அமைப்பதற்கு களப்பணி ஆற்ற வேண்டும் என்ற வைகையிலே இன்றைக்கு நம்முடைய அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சகோதரர்கள் இன்றைக்கு களப்பணி ஆட்சி கொண்டிருக்கிறார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.