
செய்தியாளர்களிளிடம் பேசிய மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, நிச்சயமா நான் சொல்றேன்…. அப்போ எப்படி இரண்டா இருந்தது ஒண்ணா இணைச்சி, நாங்க சக்சஸ் புல்லா வெற்றியை கண்டோமோ அதே போல நிச்சயம் நான் செஞ்சு காட்டுவேன் என்பதில் ஆணித்தனமான நம்பிக்கை இருக்கு.
நான் ஒன்னே ஒன்னு சொல்லட்டா… அதாவது ஒவ்வொருத்தங்களும் ஒவ்வொரு மாதிரி. நீங்க இருக்கீங்க… இப்ப நீங்க பார்த்தீங்கன்னா…. திருநெல்வேலி, தூத்துக்குடி அங்கு எல்லாம் பாத்தீங்கன்னா… அவங்கள முருகனை தான் முதல எடுத்துப்பாங்க…
ஒவ்வொரு ஊர்ல ஒவ்வொரு வழக்கம் இருக்கு. இப்போ அதனால நாம வந்து நீ முருகனை கும்பிடுற…. நீ சிவனை கும்பிடுற… அப்படின்னு சொல்லி பிரிச்சா பாக்க முடியும்…. நீ பெருமாளே கும்பிடுற அப்படின்னு பிரிச்சி பார்க்க முடியாது. இன்று அரசாங்கம் என்ன பண்ணுது ? அதை தான் மத்தவங்களாம் புரிஞ்சிக்கணும்னு ஆசைப்படுறேன் என தெரிவித்தார்.