செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பெரும் வெள்ள சேதத்துக்கு பிறகு பல இடங்களில் மருத்துவ முகாம் போட்டோம். அதேநேரம் தூத்துக்குடியில் பெரிய வெள்ள சேதம் ஏற்பட்ட உடனே,  தூத்துக்குடியில் அங்கு போய் மக்களுக்கு உதவி செய்ய வேண்டியது  வந்துச்சு. அங்க மருத்துவ முகாம் நடத்தினோம்.   அங்கு இருக்கும்போதே இந்த ரசாயன உர ஆலையில் அம்மோனியா நச்சுக்காற்று வெளியான பிறகு நம் மக்கள் அவதி உற்றதை  நீங்க பார்த்தீங்க.

மூச்சு திணறல், கண் எரிச்சல்… இதெல்லாம் வந்து ரொம்ப கஷ்டப்பட்டாங்க. வாழ்விடத்தை விட்டு வெளியேறும் நிலைமை வந்துச்சு.  அதனால இந்த இடத்துல இப்போ மருத்துவ முகாம் போடுறோம். பாதிக்கப்பட்ட இடங்கள் எல்லாம் போட்டு இருக்கோம். அது வெள்ள சேதம், இது  நச்சுக்காற்று வெளியானதால் என் மக்கள் எல்லாருமே மருத்துவமனையில் போய் சோதிச்சுக்க முடியாது. அதனால் நாங்க அவங்க வாழ்விடங்கள் தேடி,  எங்க மருத்துவர்கள் வந்து இந்த  முகாமை நடத்துறாங்க.

ரொம்ப நுட்பமா நீங்க பாத்தீங்கன்னா….  இது எப்படி இருக்கு அப்படின்னா….  கடலோர கிராமங்கள்,  வாழ்விடங்கள்….. குறிப்பாக பெரும் எண்ணிக்கையில் மீனவ மக்கள் வாழ்கின்ற இடம்.  அது கடலூர், தூத்துக்குடி, எனூர் இந்த இடங்களில் வாழுகிற மக்களுக்கு பெரிய அரசியல் வலிமையோ,  ஒரு அதிகார வலிமையோ இல்லாததால்….

எளிய மக்களாக இருப்பதால்,  எல்லா நச்சு அலைகளுமே நீங்க பாத்தீங்கன்னா…  திட்டமிட்டு இந்த கடலோரம் இருக்குது. சைமா,  சிப்காட்,  நீங்க பார்த்திருப்பீங்க…. தமிழ்நாட்டினுடைய பெரிய குப்பைமேடு கடலூர் தான். இந்தியாவின் குப்பைமேடு தமிழ்நாடு அது வேற. அதே மாதிரி தூத்துக்குடியில் வெறும் நச்சாலை தான். எண்ணூரில் வந்து நீங்க வாழவே முடியாது. எந்த பக்கம் போனாலும்  கொசத்தலை ஆறு  அல்லது மற்ற எதுவோ எல்லா இடத்திலும் கழிவு தான். நீங்க ஓரத்துல பாத்தீங்கன்னா…  மீனு செத்து,  செத்து மிதக்கும் என விமர்சனம் செய்தார்.