நடிகர் மன்சூர் அலிகானுக்கு கேப்டன் பிரபாகரன்  படம் ஒரு திருப்புமுனை ஏற்படுத்தி கொடுத்தது  இந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு அவருக்கு நிறைய நடிக்க வாய்ப்புகள் வந்தன. அனைத்து மொழிகளிலும் 250 படங்களுக்கு மேல் நடித்துள்ள இவர், ஏராளமான படங்களை தயாரித்து இயக்கியுள்ளார். இவர் ஒரு சில மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் நடித்துள்ளார். இவர் அரசியல் கட்சியும் தொடங்கியுள்ளார்.

இந்நிலையில் தமிழ் தேசிய புலிகள் கட்சி தலைவர் மன்சூர் அலிகானிடம் விஜய் அரசியலுக்கு வருவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு, “விஜய் அரசியலுக்கு வந்தால் நான் பதுங்கிவிடணுமா?. அவர் நாளை தான் அரசியலுக்கு வருகிறார். இன்று GOAT படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். GOAT என்றால் ஆடுதானே?. பிரியாணி போட்டு சாப்பிட்டு போயிட்டே இருப்பேன் என கூறியுள்ளார். இதற்கு விஜய் ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.