கோவை தொகுதியை யாருக்கு ஒதுக்கினாலும், அவர்களை வெற்றிபெற வைக்க வேண்டும் என கோவை மாவட்ட திமுக நிர்வாகிகளுக்கு அமைச்சர் உதயநிதி அறிவுறுத்தியுள்ளார். திமுக கூட்டணியில் கமல்ஹாசனின் மநீம இணைய உள்ளதாக ஏற்கெனவே தகவல் வெளியாகி இருந்தது.

இந்த நிலையில், கட்சி நிர்வாகிகளுக்கு உதயநிதி புதிதாக அறிவுறுத்தியுள்ளதால். கோவை தொகுதியில் நிச்சயம் கமல் போட்டியிட வாய்ப்பு என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.