சட்டப்பேரவைக்குள் நுழைந்து முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் எலும்புகளை முறிப்போம் எனப் பொதுக்கூட்டம் ஒன்றில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விளாத்திகுளம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி. மார்க்கண்டேயன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் அவருக்குச் சென்னை உயர் நீதிமன்றம் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 3, 2026) அன்று ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. நீதிபதி ஜி.கே. இளந்திரையன் இந்த வழக்கை விசாரித்துத் தீர்ப்பளித்தார்.

திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் இனிவரும் காலங்களில் முதலமைச்சருக்கு எதிராக இதுபோன்ற அவதூறான மற்றும் வன்முறையைத் தூண்டும் வகையிலான பேச்சுகளில் ஈடுபட மாட்டேன் என்று தூத்துக்குடி மாவட்ட நீதித்துறை நடுவர் மன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

“>

 

மேலும், எதிர்வரும் ஆகஸ்ட் 5, 2026 முதல் தொடங்கவுள்ள சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் கலந்துகொள்ளும் நாட்களைத் தவிர, மற்ற அனைத்து நாட்களிலும் தூத்துக்குடி மாவட்டக் குற்றப்பிரிவு காவல் அதிகாரியின் முன்பு நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும் நீதிமன்றம் தனது உத்தரவில் கண்டிப்புடன் குறிப்பிட்டுள்ளது.