உத்தரப்பிரதேச மாநிலத் தலைநகர் லக்னோவில், பள்ளிச் சிறுவர்களை ஏற்றிச் சென்ற வாகனம் மீது கன்வாரியாக்கள் திடீரெனக் கல்லெறிந்து தாக்குதல் நடத்திய கொடூரமானச் சம்பவம் பெரும் பரபரப்பையும் பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
வழக்கம்போல் பள்ளிச் சிறார்களைச் சுமந்துகொண்டு சாலையில் பயணித்துக் கொண்டிருந்த அந்த வேனை, யாத்திரையாகச் சென்று கொண்டிருந்த கன்வாரியாக்கள் கும்பல் திடீரெனச் சூழ்ந்து கொண்டது. எந்தவித முன் கோபமும் இன்றி, அப்பாவிச் சிறுவர்கள் உள்ளே இருப்பதை அறிந்தும், அவர்கள் அந்த வேனை நோக்கிக் கற்களை வீசித் தாக்குதல் நடத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாக்குதல் நடத்தப்பட்ட அந்தச் சமயத்தில், வேனுக்குள் இருந்த சிறிய குழந்தைகள் பயத்தில் உறைந்துபோய் அலறியடித்துக் கதறியுள்ளனர். வேனின் கண்ணாடிகள் உடைந்து சிதறிய நிலையில், குழந்தைகள் உயிருக்குப் பயந்து அலறிய காட்சிகள் அங்கிருந்த சிலரால் வீடியோவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தப் பதைபதைக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகித் தற்போது பரவி வருகிறது. பக்தியின் பெயரால் சாலையில் செல்லும் பொதுமக்கள் மற்றும் பள்ளி குழந்தைகள் மீது இதுபோன்ற வன்முறையை ஏவுவது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது எனச் சமூக ஆர்வலர்களும் பெற்றோர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்தச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்ததும், லக்னோ காவல் துறையினர் உடனடியாகக் களத்தில் இறங்கி விசாரணையைத் முடக்கி விட்டுள்ளனர். வன்முறையில் ஈடுபட்ட நபரைக் கண்டறியும் வகையில் சிசிடிவி காட்சிகள் மற்றும் இணையத்தில் வைரலாகும் வீடியோக்களை ஆய்வு செய்து, வழக்குப்பதிவு செய்து தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
பாதுகாப்பாகப் பள்ளிக்குச் சென்ற குழந்தைகள் மீது நடத்தப்பட்ட இந்த வன்முறைச் சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளதுடன், தவறு செய்தவர்கள் மீது மிகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.
उत्तर प्रदेश : लखनऊ में कांवड़िया ड्रेस में आए कुछ लड़कों ने एक स्कूली वैन पर पथराव कर दिया। वैन के शीशे टूट गए। उसमें कुछ बच्चे सवार थे, जो दहशत में आ गए। पत्थरबाजी करके आरोपी फरार हो गए। pic.twitter.com/TdwpbUo34X
— Sachin Gupta (@Sachingupta) August 3, 2026
“>
