டெல்லி-டேராடூன் தேசிய நெடுஞ்சாலையில் கங்கை நீர் எடுத்துச் சென்ற காவடியார்கள் இடையே நிகழ்ந்த திடீர் மோதலும், அதைத் தடிக்கச் சென்ற போலீஸ் வாகனம் மீது உக்கிரமான காவடியார்கள் தாக்குதல் நடத்திய சம்பவமும் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மீரட் மாவட்டம் தௌராலா பகுதியில், கடந்த திங்கட்கிழமை அதிகாலை சுமார் 2:30 மணியளவில் இந்த மோதல் அரங்கேறியது. ஹரிவாரில் இருந்து கங்கை நீரைச் சுமந்து கொண்டு காவடியார்கள் தங்களது சொந்த ஊர்களுக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, எதிர்பாராதவிதமாக இரண்டு வெவ்வேறு குழுவினரின் பைக்குகள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டன. இந்த விபத்து காரணமாக இரு தரப்பினருக்கும் இடையே ஆரம்பத்தில் சிறிய வாக்குவாதம் ஏற்பட்டு, அது சிறிது நேரத்திலேயே கைகலப்பாக மாறியது. தகவலறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், இருதரப்பினரையும் சமாதானப்படுத்த முயன்றனர்.
காவல்துறையினர் தலையிட்டும் நிலைமை கைமீறிச் சென்றது. அப்போது, கூட்டத்தில் இருந்த சில ஆக்ரோஷமான காவடியார்கள் போலீஸ் வாகனத்தை முற்றுகையிட்டனர். அந்த வாகனத்திற்குள் அமர்ந்திருந்த தலைமை காவலர் தினேஷ் மீதும் அவர்கள் திடீரென தாக்குதல் நடத்தினர்.
பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்வதற்காகவும், சட்டம்-ஒழுங்கைக் கண்காணிக்கவும் காவல்துறையினர் சிலரை சாதாரண உடைகளிலோ களமிறக்குவது வழக்கம். அந்த வகையில், காவடியார் உடையில் பணியில் அமர்த்தப்பட்டிருந்த தலைமை காவலர் தினேஷை, எதிர்தரப்பைச் சேர்ந்தவர் எனத் தவறாகப் புரிந்துகொண்ட ஆக்ரோஷமான கும்பல் அவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
यूपी : मेरठ में कांवड़ियों ने दो पुलिसकर्मियों को पुलिस जीप से बाहर निकालकर पीटा, कपड़े फाड़ दिए। दरअसल, बाइक सवार व्यक्ति ने कांवड़ियों को टक्कर मार दी थी। इस सूचना पर थाने के 2 पुलिसकर्मी सादा कपड़ों में जीप लेकर पहुंच गए। आरोपी व्यक्ति तो भाग गया, लेकिन कांवड़ियों ने… pic.twitter.com/sVorKI19Va
— Sachin Gupta (@Sachingupta) August 3, 2026
இந்தச் சம்பவம் குறித்துப் பேசிய எஸ்.பி சி “சில காவடியார்கள் போலீஸ் வாகனத்திற்குள் அமர வைக்கப்பட்டிருந்தனர். வாகனத்திற்குள் இருப்பவர்கள் மீதுதான் தாக்குதல் நடத்தப்படுவதாகத் தவறாகப் புரிந்து கொண்ட மற்றவர்கள், இந்தச் செயலில் இறங்கிவிட்டனர். தற்போது நிலைமை முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
மேலும், இந்த மோதலில் காயமடைந்த சோனு, ஆயுஷ், சாகர், விகாஸ் மற்றும் குத்து ஆகியோருக்கு உரிய மருத்துவப் பரிசோதனைகளும் சிகிச்சையும் அளிக்கப்பட்டு, தற்போது அனைவரும் நலமுடன் இருப்பதாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் ஈடுபட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், வைரலாகும் வீடியோவின் அடிப்படையில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு, தவறிழைத்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
