
செய்தியர்களிடம் பேசிய தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு, நான் பிரஞ்சு மொழியில் சொன்னேன். நான் தவறாக பேசவில்லை. நான் என் வருத்தம் தெரிவிக்க வேண்டும். கவர்மெண்ட் ரெக்கார்டுலையே சேரி என்ற வார்த்தை இருக்கு. கவர்மெண்ட் ரெக்கார்டு நீங்க பாத்தீங்கன்னா…. அந்த வார்த்தைகள் இருக்கும். வேளச்சேரி இருக்கு அதுக்கு என்ன அர்த்தம்?
செம்மஞ்சேரின்னு இருக்கு… வேளச்சேரி இருக்கு ஏரி எல்லாம் கிடையாது. வேலை ஏரி கிடையாது, வேளச்சேரி. அதுக்கு என்ன அர்த்தம் ? நீங்க எல்லோரும் தமிழ் தெரிஞ்சவங்க தானே…. சேரிக்கு என்ன அர்த்தம் நீங்களே சொல்லி விளக்கம் குடுங்க… சேரிக்கு என்ன அர்த்தம்னு நீங்க எனக்கு விளக்கம் குடுங்க… அந்த வார்த்தையால் தானே உங்களுக்கு பிரச்சனை வருது.
எனக்கு தமிழ் தெரியாதுன்னு வச்சுக்கோங்களேன்…. நீங்க எனக்கு விளக்கம் கொடுங்க…. சேரி என்றால் என்ன? அரசியலா நீங்க தான பண்ணுறீங்க. பட்டியலின மக்கள் வாழக்கூடிய பகுதியாக மாற்றி… அந்தப் பகுதியில் வாழும் மக்கள் நமக்கு சமமாக உட்காருவதற்கு தகுதி கிடையாதா ? நமக்கு சமமாக இருப்பதற்கு தகுதி கிடையா? நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை என தெரிவித்தார்.