செய்தியாளர்களிடம் பேசிய இந்து சமய அறநிலையத்துறை சேகர் பாபு, திருத்தேர்கள் என்று சொன்னால்,  இந்த ஆட்சி ஏற்பட்ட பின்பு தான் மூன்று திருக்கோயில்களில் தங்க ரதமும், 5 திருக்கோயில்களில்  வெள்ளி ரதங்களும் அறிவிக்கப்பட்டன. அதில் திருத்தணி முருகன் கோயிலில் அறிவிக்கப்பட்ட வெள்ளி ரதம் பக்தர்களுடைய நேர்த்திக்கடன் பயன்பாட்டுக்கு விடப்பட்டுள்ளது. 1991-ஆம் ஆண்டு ஏற்பட்ட விபத்து காரணமாக நெல்லையப்பர் திருக்கோயிலில் சிதிலமடைந்து இருந்த வெள்ளிதேர்….

32 ஆண்டுகளுக்குப் பிறகு மாண்புமிகு முதலமைச்சர் கவனத்திற்கு  கொண்டு சென்றவுடன்,  அந்த கோயிலுக்கு மூன்று கோடி ரூபாய் செலவிலே வெள்ளி தேர் அமைப்பதற்கு உத்தரவிட்டிருக்கின்ற முதல்வர் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள். அதேபோல் 71 மர திருத்தேர்கள்  இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு இன்றைக்கு புதிதாக உருவாக்கப்படுகின்ற பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 48 திருக்கோயில்கள் திருத்தேர்  மரமாத்து பணிக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு,

சிறந்த முறையில் நிர்வகிக்கப்பட்டு வருகின்றது.  அதே போல திருக் குளங்களை எடுத்துக்கொண்டால் இந்த ஆட்சி ஏற்பட்டபிறகு மாதவரத்தில்  கரி வரதராஜப் பெருமாள் திருக்கோயிலில் புதிதாக திருக்குளத்தை ஏற்படுத்திருக்கின்றோம். திருக்கோயில் புனரமைக்கின்ற பணிகளுக்கு அதிக அளவில் நிதியை ஒதுக்கீடு செய்து, இன்றைக்கு  திருக்கோயிலில் திருக்குளங்கள் புரமைக்கின்ற பணிகள் நடந்து கொண்டு இருக்கின்றன.

இந்த ஆட்சி நடைபெற்ற பிறகு இதுவரையில் வரலாற்றில் இல்லாத அளவுக்கு 1143 திருக்கோவிலுக்கு குடமுழுக்குகள் நடைபெற்று இருக்கின்றன. இந்த ஆட்சி ஏற்பட்டபிறகு ஆக்கிரமிப்பாளர்களில் இருந்து 5500 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு,  கன்னியாகுமரியில் நூறாண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த 200 திருக்கோயில்கள் திருப்பணிக்கு எடுக்கப்பட்டு,  36 திருக்கோயில்கள் இதுவரையில் குடமுழுக்கு நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.

இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு பணியாளர்களின் காலி  பணியிடங்கள் 200க்கும் மேற்பட்ட பணி இடங்கள், தமிழ்நாடு தேர்வாணையக் குழுவின் வாயிலாக பணியிடங்கள் நிரப்பப்பட்டிருக்கின்றன. நூற்றுக்கும் மேற்பட்ட கருணை அடிப்படையில் ஆணைகள் இந்த ஆட்சி வந்த பிறகு வழங்கப்பட்டன என்பதை   பெருமையோடு தெரிவித்துக் கொண்டு, திருவள்ளுவருக்கு திருக்கோயில் புனரமைக்கின்ற பணி,  அவ்வையாருக்கு திருக்கோவில் புனரமைக்கின்ற பணி அதுபோல மயிலாபுரிலே ஆன்மீக தலத்தை அமைக்கின்ற பணி….

இப்படி சான்றோர்கள் சார்ந்த திருப்பணியும் இந்த ஆட்சியில் தான் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. ஆகவே இந்த ஆட்சி என்பது இறை அன்பர்களை பாதுகாக்கின்ற ஆட்சி மட்டுமில்லாமல்,  தெய்வ திருமேனிகளை மீட்டெடுக்கின்ற ஆட்சியாகவும் இந்த ஆட்சி இருக்கிறது. இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு தான் 200 உலோக சிலைகள் கண்டெடுக்கப்பட்டு மீட்கப்பட்டிருக்கின்றன. கற்சிலைகள் நூறு சிலைகள் மீட்டெடுக்கப்பட்டிருக்கின்றன.

மொத்தமாக 400 கலைப் பொருள்கள் இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு நேற்றைய வரையில் மீட்டெடுக்கப்பட்டிருக்கின்றன.  ஆகவே இந்து சமய அறநிலைத்துறை என்பது இன்றைக்கு மாண்புமிகு தமிழக முதல்வர் ஆட்சி என்பது இந்துக்களுக்கும்,  பாதுகாப்பான ஆட்சி ஆன்மீகத்திற்கு எல்லா வகையிலும் சிறப்பு சேர்க்கின்ற ஆட்சி அதை போல் ஆன்மீகத்தை வளர்க்கின்ற நோக்கில் சிவராத்திரி என்பது இதுவரையில் துறையின் சார்பிலேயே கொண்டாடப்படவில்லை. முதன்முறையாக மயிலாப்பூரிலேயே சிவராத்திரியை கொண்டாடினோம். அடுத்த ஆண்டு கடந்த ஆண்டு ஐந்து திருக்கோயில்களில் அந்த நிகழ்ச்சியை விரிவுப்படுத்தினோம் என தெரிவித்தார்.